பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், புலவர் கூடலூர் கிழார் மற்றும் சிலர் வானத்தில், எரிகல் விழுவதைக் கண்டுள்ளனர். அந்நிகழ்வினைப் புலவர் கிழார், புறநானூறு பாடலில் மிகத் துல்லியமாக குறித்துள்ளார். அந்நாள் இன்று!
அதுபோன்ற ஒரு நிகழ்வினை, இன்று (ஏப்ரல் 24, 2020) நாமும் காண இயலும். மேலும், கடந்த ஒருவாரமாக உலகின் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வினைக் காண முடிந்துள்ளது.
பாடல்:
"ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்,
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய,
பங்குனி உயர் அழுவத்து,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதனெதிர் ஏர்தர,
தொல் நாள்மீன் துறை படிய,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
அளக்கர்த் திணை விளக்காகக்
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;
அதுகண்டு, யாமும் பிறரும் பல்வேறு இரவலர்
...."
- கூடலூர் கிழார் ( 229 / புறம்400 )
விளக்கம்:
சித்திரை மாதம் கார்த்திகை நாளின் அடர்ந்த இருள் சூழ்ந்த (நிலவானது மேஷம் ராசியில் உள்ளதால் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் நிலவொளி இல்லாதிருக்கும்) நடு இரவில், கிழக்கில் அனுசம் நட்சத்திரமும், மேற்கில் புனர்பூசம் நட்சத்திரம் எல்லையாக இருந்தன. இதற்கு முந்தைய மாதமான பங்குனியில், வானின் உச்சியில் இருந்த உத்திரம் நட்சத்திரம், நிகழும் சித்திரை மாதத்தில், உச்சியிலிருந்து விலகி மேற்கு நோக்கி சரிய துவங்கியது. அதே சமயத்தில், அதற்கு முன் எட்டாம் இடத்திலிருக்கும் மிருகசிரிஷம் நட்சத்திரம் தொடுவானில் மறைந்தும், பின் எட்டாம் இடத்திலிருக்கும் மூலம் நட்சத்திரம் தொடுவானில் எழாமலும் இருந்தன.
இந்த நேரத்தில் (தோராயமாக இரவு 10.30 - 11 மணி), வானில் எரி விண்கல் தோன்றியதனை, புலவரும், இன்ன பிறரும் கண்டதாக புலவர் குறிப்பிட்டுள்ளார். இவர் சேர நாட்டின் கூடலூர் நகரைச் சேர்ந்தவர். எனவே, இந்நிகழ்வினை அவர் அங்கிருந்து கண்டிருக்கலாம்.
ஒரு சுவாரசியமான தகவல் யாதெனில், புலவர் கிழார் காலத்தய, மூலம் நட்சத்திரத்தின் ஒளியையே இப்பொழுது நாம் காண்கின்றோம். ஏனெனில், இந்நட்சத்திரம் 2000+ ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (அதாவது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடைய ஒளியின் வேகம் மாறதது என்ற கோட்பாட்டினை இன்றுவரை யாரும் தவறென்று நிருபிக்கவில்லை. எவரேனும் ஒளியின் வேகம் காரணிகளைக் கொண்டு மாறும் என்று நிறுவினால், இந்த தகவலின் காலமும் மாறலாம்).
குறிப்பு:
இனைக்கப்பட்டுள்ள படங்கள் இந்நிகழ்வு நடக்கும் நாளின் இரு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை.

பங்குனியில் மாதத்தில் இந்நேரத்தில் வானத்தின் உச்சியிலிருந்த இந்த நட்சத்திரம், இம்மாதத்தில் மேற்கு நோக்கி சரியத் தொடங்குகிறது.
கிழக்கில் உதயமாகிய அனுஷம் நட்சத்திரம்
மேற்கில் மறையும் தருவாயில் உள்ள புணர்பூசம்.
மிருகசிரீஷம் நட்சத்திரம் - இரவு 7 மணிக்கு எடுக்கப்பட்ட படம். புலவர் எரிகல்லை பார்த்த 11 மணியின் போது இது மறைந்து விடும்
இன்று எரிகல் விழும் பகுதி
0 comments:
Post a Comment