நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிக்க புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே!!
- வெண்ணிக் குயத்தியார் ( 66 / புறம்400 )
விளக்கம்:
கடலில் பெரிய கலங்களை காற்றின் சீற்றத்தினால் பாதிக்கப்படாமல் செல்லுத்தியவர்கள் சோழ மன்னர்கள். அவர் வழிவந்த, மிகப்பெரும் யானைப்படையை உடைய கரிகால் வளவனே!
நீ, பகைவரின் இடம் தேடிச் சென்று, உன் ஆற்றல் உலகறிய அப்போரில் வெற்றி கண்டாய். ஆனால், புறப்புண் பட்டதற்கு நாணி, வெண்ணிப் போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர் நீத்து புகழ் உலகம் சென்ற சேரமான் பெருஞ்சேரலாதன், உன்னைக் காட்டிலும் நல்லன் அல்லவன்றொ?!!!

0 comments:
Post a Comment