வானில் வடகிழக்கு பகுதியில் லைரா நட்சத்திரக் கூட்டத்தைக் காணலாம். இக்கூட்டத்தின் மிகப் பிரகாசமான நட்சத்திரம் வேகா என்றழைக்கப்படுகிறது.
இந்த நட்சத்திரக்கூட்டத்தில் வளைய வடிவ நெபுலா அமைந்துள்ளது. ஹபுல் தொலைநோக்கியின் படம் இனைக்கப்பட்டுள்ளது.
நெபுலா என்பது ஒரு ராட்சத நட்சத்திரம் வெடிப்பின் போது தூக்கி எரியப்படும் தூசித் துகள்கள், வாயு மற்றும் பிற கனிமங்களால் ஆனதாகும். மேலும், இத்தகைய வெடிப்பின் போது நட்சத்திரத்தின் நிறையினைப் பொருத்து அது கருந்துளை உருவாகவும் வாய்ப்புள்ளது.
லைரா நட்சத்திரக் கூட்டத்தில் வளைய வடிவ நெபுலா உருவாகியுள்ளது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நான் கைபேசி புகைப்படத்தின் மூலம் எடுத்த தொடர் புகைப்படங்கள், அங்கு கருந்துளை உருவாகியுள்ளனவா என்ற சந்தேகத்தினை என்னுள் எழுப்பியுள்ளன. இந்த நட்சத்திரக் கூட்டதில் உள்ள வேகா நட்சத்திரத்தினைச் சுற்றி பல நட்சத்திரங்கள் அதிவேகத்தில் வலம் வருவது போன்று பதிவாகியுள்ளது.
0 comments:
Post a Comment