தமிழ் - வடமொழி
(மேற்கோள் காட்டும் வரலாற்று ஆர்வலராக ஒருவன்)
சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் தமிழ், சமஸ்கிருத சண்டையின் காரணமறியாமல் குழம்பியுள்ளேன்.
சங்க காலத்திற்கு முன்பிலிருந்தே தமிழும், வடமொழியும் பின்னிப் பினைந்தே வளர்ந்து வந்துள்ளன. இவை இரண்டிற்கும் பல ஒற்றுமைகளும், தனித்துவ குணங்களும் உண்டு. இவ்விரு தொண்மை மொழிகளும், அகர வரிசை ஒலியோசை எழுத்துக்களைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனை எதேச்சையான ஒற்றுமையாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் இரு மொழியில் அறிஞர்களும் கலக்காமல், இவ்வொற்றுமை தோன்ற இயலாது என்றே கருதுகிறேன்.
இவ்விரு மொழிகளும் தொண்மையானவை என்பது உலகமறிந்த ஒன்றாகும். எனினும், இவ்விரு மொழிகளில் எது முதன்மையானது என்ற கேள்வி பல வருடங்களாக உலா வருகின்றது. (என் வரையில், தமிழ் மொழியே முதன்மையானது என்று கருதுகிறேன், மேலும் இதற்கான எனது கருத்தினை வேரொரு பதிவில் இடுகிறேன்).
சங்க கால இலக்கியங்களில், நான்கு வேதங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளமைக்கு பல ஆதாரங்கள் உள்ளன. அக்கால இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு பாடல் ஒன்றில், பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன் நான்கு வேதங்கள் பாடி வேள்வி செய்துள்ளார் என்று தமிழ் புலவர் கூறுகிறார்.
"நான் மறை முதல்வர் சுற்றம் ஆக,
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!"
மேலும், சங்க கால பாண்டிய மன்னர் ஒருவர் பல யாகம் செய்து, பல்யாக சாலை முதுகுடுமி என்ற பெயரும் பெற்றுள்ளார். தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கிய அதியமான் மரபினர் கல்வெட்டிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்திலும், யாகம் வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. அதன் பின் வந்த சோழர் காலத்திலும் நான்கு வேதங்கள் ஓதும் வழக்கமும் இருந்துள்ளது. அதன் சாட்சியாக, உத்திரமேரூர் கல்வெட்டைக் கூறலாம்.
இவை அனைத்திற்கும் மேலானதாக, தமிழரின் தொண்மையை உலகுக்கு எடுத்துக் கூறிய சமீபத்திய கீழடி (கொந்தகை) அகழ்வாய்விலும், சமஸ்கிருத எழுத்துக்களுடன் ஏராளமான பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
வழி வழியாக தமிழின் அங்கமாக விளங்கி வந்த சமஸ்கிருத மொழியினை, நாம் அழிக்க நினைப்பது வரலாற்றுப் பிழை ஆகாதா?
ஒன்று நிச்சயம், சமஸ்கிருதம் அழிந்தால், அம்மொழியில் உள்ள பல சொற்களின் வேர் தமிழ் என்ற உண்மையும் அழியும். பிற்காலத்தில் தமிழ் மொழியின் தொண்மைக் காலம் சுருக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம்.
0 comments:
Post a Comment