January 11, 2020
0
புலி என்பது சோழர்களின் இலட்சினை ஆகும். அதுவே அவர்களின் அடையாளமாகுமா?

எனில் இடைக்குன்றூர் கிழார் என்னும் புலவர், ஏன் பாண்டிய நெடுஞ்செழியனை "சோம்பல் முறித்து வேட்டைக்கு கிளம்பிய வேங்கை" என்று பாடியுள்ளார்?

பாடல்:

"வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்

அணங்கு அருங் கடுந்திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து,

அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன

..."

எனவே, புலி போன்று வீரம் காட்டி பகைவரை அழிப்பவன் என்ற நோக்கில், சோழர்கள் அதனை தங்கள் இலட்சினையாக கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனில் புலியின் எக்குணம் சோழர்களின் இலட்சினையில் அதனை இடம்பெறச் செய்தது?




0 comments:

Post a Comment