December 20, 2019
0
பேரரசரான இராஜராஜ சோழர் குண்டாங்குழீஸ்வரம் என்னும் கோவிலை எடுப்பித்தார். இக்கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்று, இளவரசரான இராஜேந்திர் இக்கோவிலுக்கு வருகை தந்து வழங்கிய தானத்தைப் பற்றிக் கூறுகின்றது. இக்கல்வெட்டானது மிகவும் சிதைந்த நிலையிலுள்ளதால், முழு விவரமும் அறிய இயலவில்லை.

"... கொண்ட நிலம் திரிபுவன மாதேவி வதிக்கு கிழக்கே வீர சோழன் வாய்க்காலுக்கு தெற்கே 2 கண்ணாற்று 2 சதிரத்து...

... (வயிற்று) பிள்ளையார் வீர சோழ தேவர் திருமுகஞ் செய்தருளிந படி ..."




வீரதேவன் என்ற பட்ட பெயர் உள்ள அரசர்கள்,
1. முதலாம் பராந்தக சோழர்
2. முதலாம் இராஜேந்திர சோழர்
3. வீர ராஜேந்திர சோழர் (இயற் பெயர்)

இக்கோவிலை எடுப்பித்தவர் முதலாம் இராஜராஜ சோழர் ஆவார். எனவே, இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இளவரசர் முதலாம் பராந்தக சோழராக இருக்க இயலாது.

மேலும், இக்கல்வெட்டிலுள்ள சில வரிகள் இக்கோவிலிலுள்ள மற்றொரு இராஜராஜசோழரின் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. 

"... திரிபுவன மாதேவி வதிக்கு மேற்கே வீர நாராயண வாய்க்காலுக்கு தெற்கு 1 கண்ணாற்று 4 ஞ் சதிரத்து..."


எனவே, இங்கு விஜயம் செய்து தானம் வழங்கிய இளவரசர், இராஜேந்திர சோழரே ஆவார்.

0 comments:

Post a Comment