September 27, 2018
0

நிழல் தரு வேங்கை வெண்குடை கொண்டு

நீதிக் கோர் இலக்கணமாம் மனுவைக் கொணர்ந்து

திருமகள் போல மூவுலகும் தனக்கென பூண்டு

தண்டாற் கொண்டு தொன் மதுரை எறிந்து

கேரளக் கடிகையாம் காந்தளூர் களம் கண்டு

தன் ஆதித்யனை மறைத்த கருமேகம் களைந்து

மாதண்டன் வல்லவரையன் வந்தியத்தேவன் துணை கொண்டு

அதிதீயை சிறை மீட்டு விளங்கினை களைந்து

சேர பாஸ்கர ரவிவர்மன் மீது வெகுண்டு

எய்படை எறிபடை வேழத்துடன் கலம் கவர்ந்து

முதல் வேட்டை முடித்துவந்த வேங்கை கண்டு

மந்திரி மண்டலத்தாரால் ராஜராஜர் எனப்பட்டம் புனைந்து,

இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரீ கோ இராஜராஜகேசரி

ஸ்ரீ இராஜராஜ சோழர் புகழ் வாழ்க வாழ்கவே!!


- தனி ஒருவன்

0 comments:

Post a Comment