September 27, 2018
0

சேயிழை பெறுகுவை வாள்நுதல் விறலி!

தடவு வாய் கலித்த மாஇதழ்க் குவளை

வண்டு படு புது மலர் தண்சிதர் கலாவப்

பெய்யினும், பெய்யாது ஆயினும் அருவி

கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக!

மால்புடை நெடுவரைக் கோடுதோறு இழிதரும்

நீரினும் இனிய சாயல்

பாரி வேள்பால் பாடினை செலினே!!

- கபிலர் ( 105 / புறம்400 )

விளக்கம்:

கூர்மையான நெற்றியுடைய விறலியே (பாணர்க்கு நிகரான பெண்பாற் சொல்), மழை பொழிந்தாலும், பொழியாவிடினும்,  அகன்ற மலைச் சுனையில் பூத்திருக்கும் மலர்களின் தேன், அருவி நீரில் கலந்து உழவு செய்திருக்கும் வாய்க்காலில் பாயும்.

அத்தகைய நீரினும் இனிய பண்புடையவன் பாரி வேந்தன். அவனை பாடிச் செல்வாய் எனில், நீ அழகிய அணிகலன்களைப் பெறுவாய்.







0 comments:

Post a Comment