September 27, 2018
0

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை

கடவுள் பேணேம் என்னா; ஆங்கு

மடவர் மெல்லியர் செல்லினும்

கடவன் பாரி கை வண்ணமே!


- கபிலர் ( 106 / புறம்400 )

விளக்கம்:

நல்லதாகினும், தீயதாகினும் அல்லது குவிந்த மலர் கொத்தாகினும், எருக்கம் இலை ஆயினும், ஒருவன் அன்போடு சூட்டினால் அதனை தெய்வமானது ஏற்றுக் கொள்ளாமல் இருக்காது. அது போல, பேதையர் தாமறிந்த நிலையில் அவனை பாடிச் சென்றாலும், அவர்களுக்கு வழங்குவதைக் கடமையாகக் கொண்டவன் பாரி வேந்தன்.




















0 comments:

Post a Comment