September 27, 2018
0

வேங்கைக்கு மகனாக பிறப் பெடுத்து

தந்தையின் அகண்ட மார்பில் துயில்ந்து

பிஞ்சு கால்களில் கிங்கினிமணி யணிவித்து

சிற்றன்னை பஞ்சவ னறவணைப்பில் வளர்ந்து

ஆழ்வார் குந்தவை அறிவை பெற்றெடுத்து 

பல்கலை வல்லவரையன் அன்பை சொறிந்து 

வில் வேல் வாள்பயிற்சி அளித்து 

ஈடு இணையில்லை என்று ணர்ந்து 

பலர்குருதியில் குளித்த தன்வாளை கொடுத்து 

நிகரிலி தந்தையை விஞ்சிவாயென புகழ்ந்து 

அனுப்பியபின் வாளுருவி புல்லுருவிகள் தலையெடுத்து 

கலகம் அடக்கி அங்கமைதியை அறிந்து 

எமனும் புகவெண்ணாத மாமதுரையினும் புகுந்து 

வீரபாண்டியனிற்கும் தோல்வியெனும் அகராதியில் இடமளித்து 

சற்று கீழிறங்கி தண்டிறக்கி காத்திருந்து 

மன்னரும் வல்லவரையர் படையும்வர போரெடுத்து 

காந்தளூர் களமறுத்து தூதுவனை கொணர்ந்து 

தந்தைக்கு பலவகையில் தோள் கொடுத்து 

உடன் பகைவர் பலகளம் புகுந்து 

அதகளம் செய்து பகைவர்நாடி னைத்து 

தந்தை மனக்குறை தீர்க்கஈழம் அடைந்து 

பாண்டியர் மணிமுடி ஹாரம் கண்டெடுத்து 

காஸிபனை அரமியத்துரத்தி மகிந்தனை கொணர்ந்து 

பெண்டுகளுடன் சோழச் சிறையில் அடைத்து 

விமலாதித்தனை காக்க கீழைச்சாளுக்கம் அடைந்து 

கலிங்கமும் மகிபால வங்கமும் வென்றெடுத்து 

கங்கை நீரெடுத்து அவன்தலை மேல்சுமந்து 

வர செய்து புதுநகரம் தேர்ந்தெடுத்து 

கங்கை கொண்ட சோழபுரம் எனபுணைந்து 

அலைகடல் நடுவே பலகலம் விடுத்து 

வரும் தமிழ் மன்னனுக்குத்தன் தேர்தந்து 

பரிசளிப்பதை பண்போடு பெற்று விடைகொடுத்து 

எவரும் தாக்கிடாத கடாரத்தினுள் புகுந்து 

கப்பற்படை மூலம் எளிதில் வென்றெடுத்து 

அரிமாவை அதன் குகைசென்று வீழ்த்திவந்து 

தான் வீரவேங்கையின் மைந்தனென நிரூபித்து 

மங்கா புகழ்பெற்ற மாமன்னர் 

ஸ்ரீ இராஜேந்திர சோழர் பிறந்தநாள் இன்று!!! 


- தனி ஒருவன்

0 comments:

Post a Comment