காவிரியில் குதித்தாய்
பதைபதைக்க வைத்தாய்
திருத்தமக்கை பெற்றாய்
தெய்வமகன் ஆனாய்
நற்குணம் நல்கினாய்
நன்மதிப்பை பெற்றாய்
வீரத்தமையன் கொண்டாய்
தீரச்செயல்கள் புரிந்தாய்
போர்க்களம் புகுந்தாய்
பகைவருக்குகாலன் ஆனாய்
வீரத்திருமகன் பெற்றாய்
வீரவேங்கை ஆக்கினாய்
கப்பற்படை அமைத்தாய்
காந்தளூர் கலமறுத்தாய்
நிரந்தரப்படை அமைத்தாய்
சிம்மசொப்பனம் ஆனாய்
மாநக்காவரம் அடைந்தாய்
மாமண்டலம் ஆண்டாய்
ஆணவம் தவிர்த்தாய்
ஆடல்கலை வளர்த்தாய்
தேவாரம் தொகுத்தாய்
தேனமுது கொடுத்தாய்
மெய்கீர்த்தி செய்தாய்
பணிமகளுக்கும்இடம் கொடுத்தாய்
மக்களை நேசித்தாய்
மேருமலைக்கோவில் எழுப்பினாய்
சமயப்பொறை காட்டினாய்
புத்தவிகாரை கட்டினாய்
ஹிரண்யகர்பதானம் செய்தாய்
மறுபிறப்பை தவிர்த்தாய்
மண்ணில் புதைந்தாய்
நெஞ்சம் பிளந்தாய்
அழியாப்புகழ் பெற்றாய்
மனதில்நிலை கொண்டாய்
இராஜராஜ சோழன் நீ !!!
- தனி ஒருவன்
0 comments:
Post a Comment