அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளர்;
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!
- வேள் பாரியின் மகள்கள் ( 112 / புறம்400 )
விளக்கம்:
(கடையேழு வள்ளல்களில் ஒருவரான வேள் பாரியின் மகள்கள், அவர் போரில் இறந்ததை எண்ணி மனம் வருந்திப் பாடியது)
கடந்த மாதம் முழு நிலவன்று, நாங்கள் தந்தை உடையவளாக இருந்தோம், நாங்கள் வாழும் குன்றும் எவராலும் கைப்பற்றப்படாமல் இருந்தது.
ஆனால் இந்த மாதம் முழு நிலவன்று, எதிரி அரசர்களின் முரசு ஒலிக்கின்றது. அவர்கள் எங்கள் குன்றும் கொண்டனர், எங்கள் தந்தையையும் நாங்கள் இழந்தோம்.
0 comments:
Post a Comment