பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர்ப் பாடுவர் செந்நாப் புலவர்!
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு ஈண்டு உலகு புறப்பதுவே!
- கபிலர் ( 107 / புறம்400 )
விளக்கம்:
பாரியின் வள்ளல் தன்மையால், செம்மையான புலவர்கள் பாரி பாரி என்று புகழ்ந்து பாடுகின்றனர். இவ்வுலக மக்களைக் காப்பதற்கு பாரி ஒருவன் மட்டும் இல்லை, மழையும் அப்பணியைச் செய்கிறது என்று கருதி, பாரியை மழைக்கு நிகராக புகழ்ந்து பாடியுள்ளார்.
0 comments:
Post a Comment