கடந்த விகாரி ஆண்டின் இறுதியில், அதாவது, மார்கழி மற்றும் தை மாத காலங்களில், குருப் பெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சி தனுசு ராசியில் நிகழ்ந்தன. அதே காலத்தில், சூரியனும் தனுசு மற்றும் மகர ராசியில் சஞ்சரிக்கும் என்பதால் அந்நிகழ்வினைப் பூமியில் வாழ்ந்து வரும் எவரும் வெறும் கண்களால் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், மாதங்கள் உருண்டு, புது வருடமும் பிறந்து விட்டது. அதே நேரத்தில், மேற்குறிப்பிடப்பட்ட கோள்களும் நிலையிலிருந்து விலகி மகர ராசியில் உருண்டு கொண்டிருக்கின்றன. அதாவது, சூரியன் மற்றும் இக்கோள்கள் சஞ்சரிக்கும் ராசியானது மாறுபட்டுள்ளது. எனவே, இக்காலத்தில்(சித்திரை 30, சார்வரி - படம் எடுக்கப்பட்டது) நாம் பல கோள்களை அருகருகே வெறுங்கண்களால் காண முடிகிறது.
0 comments:
Post a Comment