May 15, 2020
0
ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் 1000 ஒளி ஆண்டு தொலைவிலுள்ள ஒரு கருந்துளையை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்டக் கருந்துளைகளில் இதுவே பூமிக்கு மிகவும் அருகில் உள்ளதாகும். 

பல வருடங்களுக்கு முன் டெலிஸ்கோப்பியம் என்ற நட்சத்திரக்கூட்டதில், இரு சார்பு நட்சத்திரங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதனை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் களமிறங்கியது. அப்பொழுது, எதிர்பாராத விதமாக இந்தக் கருந்துளையினை கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கருந்துளை அமைந்துள்ள டெலிஸ்கோப்பியம் நட்சத்திரக்கூட்டத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க இயலும். இரவு நேரத்தில், தென் திசையில், விருச்சிகம் நட்சத்திரக்கூட்டதிற்கு கீழே காணலாம்.




0 comments:

Post a Comment