May 20, 2019
0
பஞ்சாங்கம்:

1. திதி
2. வாரம்
3. யோகம்
4. நட்ஷத்திரம்
5. கரணம்

இவைகளைக் கொண்டு பஞ்சாங்கம் கணக்கிடப்படுகிறது.

1. திதி:
அமாவாசையில் இருந்து சந்திரன் வளர்ந்து பௌரணமியை அடையும் பருவம் வளர்பிறை(சுக்லபட்சம்) என்றும், பௌரணமியில் இருந்து சந்திரன் தேய்ந்து மீண்டும் அம்மாவாசையை அடையும் பருவம் தேய்பிறை(கிருஷ்ணபட்சம்) என்றும் அழைக்கின்றனர். இவ்வாறு படிப்படியாக வளரும் அல்லது தேயும் பருவம் திதி எனப்படுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றும் ஒவ்வொரு 12 (360 / 30) டிகிரியும் ஒரு திதியாகக் கண்டக்கிடப்பட்டுள்ளது.

வளர்பிறை திதிகள்:
அம்மாவாசை திதியில் இருந்து படிப்படியாக வளரும் பருவம் பின்வருமாறு அழைக்கப்படுகிறது.

1. பிரதமை
2. த்விதியை
3. த்ரிதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. த்ரியோதசி
14. சதுர்தசி

பௌர்ணமி திதி நிகழ்ந்து, படிப்படியாக தேயும் பருவமும் இதே வரிசையில் அழைக்கப்படுகிறது.

குறிப்பு: அம்மாவாசை திதி மற்றும் பௌரணமி திதியை முறையாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி என்றே அழைக்கிறோம்.

2. வாரம்:
சூரியன், சந்திரன் மற்றும் 5 கோள்களின் பெயர்களைக் கொண்ட 7 நாட்கள் வாரம் எனப்படுகிறது.

3. யோகம்:
சந்திரனானது பூமியைச் சுற்றிக் கொண்டே சூரியனையும் சுற்றிவர 27(.3) நாட்கள் ஆகின்றது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையியேயான ஒவ்வொரு 13.2 (360 / 27.3) டிகிரியும் யோகம் என்றழைக்கப்படுகிறது.

4. நட்ஷத்திரம்:
சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வர 27(.3) நாட்கள் எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் சந்திரன் ஒரு நட்ஷத்திரக் கூட்டத்துடன் இணைந்து காணப்படும். அதுவே அந்நாளின் நட்ஷத்திரம் ஆகும்.

5. கரணம்:
பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர 60 நாழிகை(24 மணி) நேரம் ஆகின்றது. ஒரு நாழிகையில்(24 நிமிடம்) பூமியின் சுழற்சி(6 டிகிரி) கரணம் என்றழைக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment