January 24, 2019
0
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல,

ஈண்டு செலல் மரபின் தன்இயல் வழாஅது,

உரவுச் சினம் திருகிய உருகெழு ஞாயிறு,

நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ் சேர்ந் தாஅங்கு,

உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்

பிணியுறு முரசம் கொண்ட காலை

நிலை திரிபு எறியத் திண்படை கலங்கிச்

சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல் செழிய!

முலைபொலி ஆகம் உருப்ப நூறி,

மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,

அவிர் அறல் கடுக்கும் அம்மென்

குவையிரும் கூந்தல் கொய்தல் கண்டே!

- கல்லாடனார் ( 24 / புறம்400 )


விளக்கம்:
நட்சத்திரங்கள் இருக்கும் வானத்தில் சூழ்ந்துள்ள இருள் அகலும் படி, தன் பரபு நிலை குறையாமல் சுடர் விடும் சூரியனைப் போன்று விளங்கி, உன்னுடைய பகைவர்கள் அழியுமாறு போர் செய்தாய். அவர்களின் வலிமையான படையை உன் வேல் கொண்டு சிதைத்துப் போர் முரசினைக் கவர்ந்த பாண்டிய நெடுஞ்செழியனே!

கருமணல் போன்ற கூந்தலையுடைய மகளிர், போரில் இறந்த கணவனைக் கண்டு தங்கள் மார்பில் கை வீசி அறைந்து அலறினர். அவர்கள் துயரில் உழன்று கூந்தல் களைவதைக் கண்டதும், குளிர்ச்சியான சந்திரனைப் போன்று விளங்கிய நின் வேல் போர் செய்வதைத் தவிர்தது.










0 comments:

Post a Comment