December 02, 2018
0

மூன்று விறல் கொண்ட உடல் (மம்மி), பெரு நாட்டில் உள்ள நாஸ்கா கோடுகள் அருகில் மிகச் சமீமாக கிடைக்கப்பட்டது. மம்மி என்றால், உடலில் உள்ள உறுப்புகளை அகற்றி விட்டு, உடலை மட்டும் பதப்படுத்துவது ஆகும். அனால், இதில் உடல் உறுப்புகள் அப்படியே இருந்துள்ளன. எனவே இது மம்மி என்று கூற இயலாது.

இதை வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு படுத்துவதற்கு சில காரணங்கள் உள்ளன.
1. மண்டை ஓடு நீண்டு உள்ளது
2. மூன்று விறல் உள்ள கைகள் (பெரு நாட்டில் மூன்று விறல் கொண்ட பாறை ஓவியம் உள்ளது)
3. கண் துளை பெரிதாகவும், காதுகள் இல்லாமலும் உள்ளது

இதுவரை நடந்த ஆய்வு முடிவுகள்:
1. இதன் மரபணுவை ஆய்வு செய்ததில் மனிதனுடைய மரபணுவை 98.5% ஒத்துள்ளது. 1.5% ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2. செயற்கையாக மூன்று விறல் அமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
3. கண்ணின் துளை பெரிதாக்கப் பட்டுள்ளதாக  ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
4. காதுகள் இயற்கையாகவே மனிதன் இறந்த பின்பு சிதைந்து விழும்
5. இன்றும், பெரு நாட்டில் மக்கள் தலையில் நூலைக் கட்டி, தலையின் அமைப்பை மாற்றும் வழக்கம் கொண்டுள்ளனர்

                                                                                                  reference: Mr. GK youtube channel










0 comments:

Post a Comment