December 28, 2018
0
கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்று ஆகி ஆறுஇனிது படுமே!
உய்த்தல் தோற்றான் ஆயின், வைகலும்
பகைக் கூழ் அள்ளற் பட்டு,
மிகப்பல தீநோய் தலைத்தலைத் தருமே!!

- தொண்டைமான் இளந்திரையன் ( 185 / புறம்400 )

விளக்கம்:

இந்த உலகமானது, சக்கரத்தையும், அடிமரத்தையும் கோர்த்து செய்யப்படும் வண்டி போன்றது. அந்த வண்டியைச் செலுத்துபவன் நல்ல குணங்கள் உடையவனாக இருப்பானாகின், அது அறத்தின் வழியே இனிது செல்லும். மாறாக! அவன் நற்குணம் இல்லாதவன் எனில், பகை எனும் சேற்றில் தானும் அகப்பட்டு, மக்களும் பல வகை துன்பத்தில் வழி வழியாக அகப்பட நேரிடும்.

0 comments:

Post a Comment