October 13, 2019
0

அக்காலத்தில் குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் அவர்களின் அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் கோவில் கட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அக்கோவில்களில் பொறிக்கும் கல்வெட்டில், பேரரசர்களின் பெயர் மற்றும் மெய்கீர்த்தியைக் குறிப்பிட்ட பின்னரே வழங்கப்பட்ட தானத்தைக் குறித்தனர். சில சமயங்களில் பேரரசரின் ஆணையினை ஏற்றும், கோவில்களைக் கட்டியுள்ளனர்.

ஆனால் ஒரு சில கோவில்களே பேரரசனால் நேரடியாகக் கட்டப்பட்டுள்ளது, அதில் ஒன்றே, ஸ்ரீ ராஜராஜ சோழர் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவில். உலகம் வியக்கும் இக்கோவிலில் பல சிறப்புகள் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் பல தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. குறிப்பாக,

"நாம் எடுப்பித்த திருக்கற்றளி"

- என்ற வரியின் மூலம் பேரரசனே இப்பணியில் தன்னைப் புகுத்தினார் என்பது திண்ணம்.

மாமன்னர் ராஜராஜ சோழரே கட்டிய கோவில் என்ற சிறப்பினைப் பெற்ற மற்றொரு கோவிலும் உண்டு. அதுவே, விழுப்புரம் அருகே உள்ள *குண்டாங்குழி மஹாதேவர்* ஆலயம். இன்று, இந்த ஆலயம் அமைந்துள்ள ஊருக்கே *குண்டாங்குழி* என்ற பெயர் நிலைத்து விட்டது.

"ஸ்ரீ ராஜராஜ தேவர் எடுப்பித்த திருக்கற்றளித் திருக்குண்டாங்குழி மஹாதேவர் ..."

- என்ற கல்வெட்டு வரிகளை இன்றும் காணலாம்.

எக்காரணத்தினாலோ சிதிலமடைந்த இக்கோவில் தற்போது இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment